thirukkural in russia presented to putin by modiji - 2026

சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பாடம் எடுத்த பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்!

லைஃப் ஸ்டைல் உரத்த சிந்தனை கட்டுரைகள்
thirukkural in russia presented to putin by modiji - 2026

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற BRICS உச்சி மாநாட்டில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் புதின் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வழங்கினார் தமிழனாக பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் அது… அதைப்பற்றி பலரும் பாராட்டி பேசி இருக்கிறார்கள் என்றாலும் பாடல் ஆசிரியர் வைரமுத்து அவர்கள் தனது பதிவில் பகவத் கீதையை கொடுத்திருந்தால் அது ஹிந்து நூலாக இருந்திருக்கும் என்றும் திருக்குறள் கொடுத்ததால் அது மனித குலத்திற்கு உரியது என்று ஆகிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார்

ஆனால் வைரமுத்துவுக்கு வரலாறு தெரியாது.

இந்த சம்பவத்திற்கு 118 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த வரலாற்று நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்…
ரஷ்யாவைச் சார்ந்த மாபெரும் அறிஞர் லியோ டால்ஸ்டாய் அவர் நமக்கெல்லாம் அதிகம் தெரியாத Orthodox கிறிஸ்தவ மரபைச் சார்ந்தவர்…

அவர் 1908 டிசம்பரில் தாரக்நாத் தாஸ் என்பவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் விவேகானந்தர் கருத்துகள், திருக்குறள் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்திற்கு டால்ஸ்டாய் A Letter to Hindu என தலைப்பிட்டிருந்தார். திருக்குறளை Hindu Kural என குறிப்பிட்டிருந்தார்.

திருக்குறள் வலியுறுத்திய அகிம்சை முதலிய கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இந்தக் கடிதத்தை படித்த மகாத்மா காந்திக்கு திருக்குறள் குறித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

டால்ஸ்டாய்க்கு திருக்குறளின் ஜெர்மன் மொழிபெயர்ப்பை படித்து ஆர்வம் ஏற்பட்டது. ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர் Karl Garul என்ற ஜெர்மனிய இறையியலாளர். லியோ டால்ஸ்டாய் திருக்குறளின் .அறத்துப்பாலில் 32வது அதிகாரம் -இன்னா செய்யாமை அதிகாரத்தின் முதல் ஆறு குறள்களை தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவரை அதிகம் கவர்ந்த திருக்குறள்.
“”இன்னா செய்தாரை ஒறுத்த ல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்”” என்பதாகும்.

தான் நம்பிய அகிம்சை கொள்கைக்கு ஆதாரமாக உலக இலக்கியங்களில் இது போன்ற கருத்து இல்லை என்பது டான்ஸ்டாய் அவர்களின் அபிப்பிராயம். காந்தியை மிகவும் கவர்ந்த கடிதம் அது…

இன்று ஓர் இந்திய பிரதமர் ரஷ்ய அதிபருக்கு திருக்குறளை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஒரு ரஷ்ய அறிஞர் இந்தியாவின் மிகச் சிறந்த தலைவருக்கு திருக்குறளை சொல்லிச் சென்றிருக்கிறார்.
திருக்குறளை வாசித்த பிறகு தான் காந்திக்கு தமிழ் படித்து திருக்குறளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என்பதை அவரே பதிவு செய்திருக்கிறார்

வைரமுத்து அவர்களே டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தின் தலைப்பு : “ஒரு ஹிந்துவுக்கு கடிதம்” என்பது.
திருக்குறளை டால்ஸ்டாய் அவர்கள் அக்கடிதத்தில் விவரித்தது “ஹிந்து குறள்” என்று!

ஆம் திருக்குறள் இந்து நாகரிகத்தின் உச்சபட்ச நன்கொடை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும். ஆனாலும் மக்களுக்கு இது தெரிய வேண்டும் என்பதற்காக இந்த பதிவு!

  • – கட்டுரையாளர் – பாஜக மாநில பொதுச் செயலாளர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.