sabarimala natai thiruppu today - 2026

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimala natai thiruppu today - 2026

புரட்டாசி (கன்னி) மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று செப்டம்பர் 16, 2026 மாலை திறக்கப்பட்டது. இன்று மாலை 5:30 மணிக்கு மேல் தந்திரி கண்டரரூ பிரம்மதத்தன் முன்னிலையில் மேல் சாந்தி பிரசாத் தலைமையில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மேல் சாந்தி 18 படி நடைபெறந்து கீழ் இறங்கி நெய் அருகில் தீபம் ஏற்றி வைத்தார்.நாளை (செப்டம்பர் 17) அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடைந்து, வரும் செப்டம்பர் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.சிறப்பு வழிபாடுகளாக நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள் இந்த நாட்களில் நடைபெறும்.

பக்தர்கள் Sabarimala Online Booking என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விர்ச்சுவல் க்யூ (Virtual Queue) முறையில் முன்பதிவு செய்து தரிசனத்திற்குச் செல்லலாம். தற்போது கேரளாவில் சபரிமலை வனப்பகுதியில் தொடர்ந்து அவ்வப்போது பெய்து வரும் மழையால், பம்பை நதி தண்ணீர் வருகிறது.

பக்தர்களுக்கு தேவையான பஸ் வசதி குடிநீர் வசதி உட்பட அனைத்து வசதிகளையும் கேரளா அரசு செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.