முகவரியைத் தொலைத்து அவதி: ஜப்பானில் நடிகைக்கு உதவிய டாக்ஸி ஓட்டுநர்

சினி நியூஸ்

anjana-keerthi அம்புலி 3டி, ஆ படங்களின் வெற்றி இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் ஜம்போ 3டி படத்தில் கோகுல் நாயகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சுகன்யா, பேபி ஹம்சிகா, அஞ்சனா, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ, ‘கும்கி’ அஷ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.எஸ்.ஜி மூவீஸ் சார்பில் ஜி.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகி அஞ்சனா கீர்த்தி தனது அனுபவத்தை கூறுகையில்… “இயக்குனர்கள் ஹரி- ஹரீஷ் உடன் பணிபுரிவது மிக இனிதானது. இருவரும் வேகமாகவும், விவேகமாகவும் வேலை செய்ய கூடியவர்கள். படத்தில் ஒரு காட்சியில் நான் ஜப்பான் பொம்மையாக நடிக்க வேண்டியிருந்தது. கண் இமைக்காமல், சலனமற்ற பொம்மையாக அசைவில்லாமல் நடிக்க சொல்லிக் கொடுத்தார். மேலும், பேபி ஹம்சிகா இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜப்பானின் டோக்கியோ, டோயாமா நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. டோக்கியோ தமிழ்ச் சங்கத்தினர் கனிவாக வரவேற்று உபசரித்தனர். ஒரு நாள் நான் தனியாக ஷாப்பிங் சென்ற போது ஜப்பானிய மொழியில் எழுதிக் கொடுத்திருந்த முகவரியை எங்கோ தொலைத்துவிட்டேன். ஒரு ஜப்பானிய டாக்சி ஓட்டுனர்தான் அப்போது எனக்கு உதவினார். நான் இந்தியாவைச் சேர்ந்தவள் என்று தெரிந்தவுடன் என்னிடம் அன்பாகப் பேசினார். ரஜினிகாந்த் குறித்தும், தமிழிலும் பேசினார்.” ஜப்பானிய நடிகர் நடிகைகளுடன் நடித்தோம். அங்குள்ள பத்திரிக்கைகளில் எங்களைப் பற்றி செய்திகள் வந்தது பெருமையாக இருந்தது. நகைச்சுவை கொண்ட 3டி படமாக உருவாகி வரும் இந்தப் படம் குழந்தைகளை அதிகம் கவரும்.” என்றார் அஞ்சனா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.