பிளஸ் டூ பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி: தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்

சற்றுமுன் தமிழகம்

01 May16 result - 2026பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், மணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார். அதில், தமிழகம், புதுவையில் பிளஸ் டு பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளனர்

கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதில், 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.