மேற்கிந்திய தீவு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இடம்பெறுபவர்களின் பட்டியலில் தோனி பெயர் இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலில், டி20 ஃபினிஷிங் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறப்படும் முன்னாள் கேப்டன் தோனி பெயர் இடம்பெறவில்லை.
தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி முதலில் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்தப் போட்டிகளில் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெறவில்லை. மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டி 20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றுள்ளார்.




