பாலியல் குறும்பட இயக்குனரின் அடுத்த படத்தில் நயன்தாரா

சற்றுமுன்

nayan 63 - 2026

மா மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு குறும்படங்களும் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய டிரெண்டை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இரண்டுமே பாலியல் தொடர்பான கதை என்பதால் சர்ச்சைகளும் எழுந்தன.

இந்த நிலையில் இந்த இரண்டு குறும்படங்களையும் இயக்கிய சர்ஜான் என்ற இயக்குனர் இயக்கி முடித்துள்ள படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகிய பின்னரும் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் சர்ஜான் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.