
சில ஆண்களுக்கு வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் இருக்கிறது.
ஆண்கள் அடிக்கடி ஆபாச படங்களை பார்க்கும்போது, அவர்களின் மூளையில் டோபமைன் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, கடைசியில் படுக்கை அறையில் முழுமையான உடலுறவு செய்ய முடியாது. ஆபாச படங்கள் பார்க்கும் போது அவர்கள் அறியாமல் விந்து வெளியாகும்.
டாக்டர் மேத்யூ கிறிஸ்டன், ஆபாச படங்களுக்கு அடிமையாகும் ஆண்கள், அதிகளவில் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு ஆளாகின்றனர் என்றும், அவர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் போகிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும் விறைப்பு தன்மை இல்லாமல் போதல் பிரச்சனைக்கு ஆபாச படங்களின் பங்கு கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
வயதானவர்களை அதிகம் பாதிக்கும்
விறைப்பு தன்மை செயலிழப்பு பிரச்சனை வயதானவர்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது.
40 முதல் 70 வயது வரை உள்ள ஆண்கள் விறைப்பு தன்மை செயலிழப்பு பிரச்சனைக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
உண்மையான உறவில் வெறுப்பு
முந்தைய ஆய்வுகளில் கூட கவர்ச்சி வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்கள் தங்கள் துணையுடன் முழு திருப்தியடைவதில்லை என்றும் தங்கள் துணைக்கு திருப்தி அளிப்பதில்லை என்றும் கூறியுள்ளது
மேலும், அதிகமாக ஆபாச படங்களை பார்ப்பவர்கள் உண்மையான உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போய்விடுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இதனால் இரவில் தூக்கம் வராமல் போகும். எந்த நேரமும் செக்ஸ் எண்ணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். ஆபாச படங்கள் அடிக்கடி பார்த்து வந்தால், இல்லற வாழ்க்கையில் தோல்வி அடையும் நிலை ஏற்படும்.