
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் நடைபெற்றது. இதற்காக மதுரைக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று தமிழிசை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், உச்சி சூரியனே எங்களை ஒன்றும் செய்ய முடியாத போது உதயசூரியன் என்ன செய்துவிட முடியும்! என்று கேள்வி எழுப்பினார். மேலும், இங்கே திரண்டிருக்கும் லட்சோபலட்சம் மக்களும், மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்காக எந்த வித தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
தமிழிசை சௌந்தர்ராஜன் அறிமுகப் பேச்சும்.. தொடர்ந்து பிரதமர் மோடியின் பேச்சும்… வீடியோ பதிவு