கனேரியா வாக்குமூலம் புதிய விசாரணைக்கு கிரிக்கெட் வாரியம் உத்தரவு

விளையாட்டு

05 Oct22 dhin Danish kaneria - 2026

பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் கனேரியா கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதை அடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி புதிதாக விசாரணை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் டானிஷ் கனேரியா. 31 வயதான இவர் பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி போட்டியில் மெர்வின் வெஸ்ட்பீல்டுடன் இணைந்து இவர் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ஆனால், `தான் குற்றம் செய்யவில்லை, நான் நிரபராதி’ என்று அவர் மறுத்து வந்தார்.

இதற்கிடையே, 6 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் கனேரியா. இதுதொடர்பாக அல் ஜஸீராவுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஆம், கவுண்டி போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் நடந்தது உண்மை தான். என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. இந்த தவற்றுக்காக ஆழ் மனதிலிருந்து மன்னிப்பு கேட்கிறேன். அந்த நேரத்தில் நான் ஒரு சர்வதேச வீரராக இருந்தேன், நான் ரொம்பவும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தேன். அதேவேளையில் கவுண்டி அணி மூலமாக அதிக பணம் சம்பாதிக்கும் வீரராகவும் இருந்தேன்.

என் தந்தைக்காகவே இத்தனை நாள் குற்றத்தை மறுத்துவந்தேன்.
ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டு எழுந்தபோது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தான் ரோல் மாடல். பாகிஸ்தான் அணிக்காக விளையாடியதை நினைத்து அவர் எப்போதும் பெருமை கொள்வார். அவரை ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் குற்றத்தை மறைத்துவந்தேன். ஆனால், பொய்களுடன் நீண்ட நாள் வாழமுடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். மேலும், உண்மையைச் சொல்லும் வலிமை இப்போது எனக்கு வந்துவிட்டது. இதற்காக மக்கள், ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது.

இப்போது நான் கிரிக்கெட்டுக்கு ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டும். பி.சி.பி-யும், ஐ.சி.சி-யும் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் இளைஞர்களுக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுக்க ரெடியாக இருக்கிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.