செஞ்சுரியை நோக்கி… 81வது முறையாக கண்ணாடி உடைந்து…

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

chennai airport glass break - 2026

சென்னை விமான நிலையத்தில் 81வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பட்டு, அழகு படுத்தப் பட்ட விமான நிலையத்தின் கண்ணாடி மேற்கூரை அவ்வப்போது உடைந்து விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கை ஆகி விட்டது. துவக்கத்தில் இதனை பெரிய அளவில் பரபரப்பாக விவாதித்த மக்கள், இப்போதெல்லாம் இதனை சர்வ சாதாரணமாக கடந்து போய்விடுகிறார்கள்.

எனவே, விரைவில் 100வது முறையாக கண்ணாடி பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது என்ற செய்தியைப் படிக்க ஆவலாக இருக்கும் அளவுக்கு இந்த விபத்துகள் கேலியாகப் பார்க்கப் படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.