
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழியின் பிறந்தநாள் நாளை (5-ந்தேதி) இதனையொட்டி அவர் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரான குடியுரிமை திருத்த சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த சட்டதிருத்தை எதிர்த்து மாணவர்களும், பொதுமக்களும், சில அரசியல் இயக்கங்களும் நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
ஆளும் மத்திய, மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் பற்றி எரிகிறது. இந்த சூழ்நிலையில் எனது பிறந்தநாளை கொண்டாட தேவையில்லை.
ஜனநாயகம் காக்க தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



