தலைமைச் செயலகத்தில் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

secretariat flag - 2026

சென்னை கோட்டை கொத்தளத்தில் கிழிந்த நிலையில் பறந்த தேசிய கொடி பின்னர் ராணுவ வீரர்களால் இறக்கி மாற்றப் பட்டது.

தலைமைச் செயலகத்தில் தினமும் காலை ஆறு மணி அளவில் ராணுவ அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றுவார்கள். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று ஏற்றப்பட்ட தேசியக் கொடி காற்று மற்றும் மழை காரணமாக கிழிந்து பறந்து வருவது குறித்து தகவல் வெளியானது.

இதை அடுத்து,  மாலை 6 மணிக்கு இறக்கப்படும் தேசியக் கொடியை வழக்கத்திற்கு மாறாக ராணுவ வீரர்கள் உடனே இறக்கி புதிய தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.