எம்பி ஆன வங்கதேச கிரிக்கெட் வீரர்

உலகம் சற்றுமுன்
IMG 20190101 WA0037 - 2026

எம்.பி. ஆகிறார் வங்கதேச வீரர் மோர்தசா: தேர்தலில் அபார வெற்றி

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மஷ்ரபி மோர்தசா சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 299 தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் 288 இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றது. அவாமி லீக் கட்சியின் சார்பில் நராலி-2 தொகுதியில் மோர்தசா போட்டியிட்டார். இதில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், விரைவில் எம்.பி.யாகப் பதவி ஏற்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறுகையில், “ எனக்கு எப்போதும் அரசியல் மீது அதிக ஆர்வம் உண்டு. நாட்டில் வளர்ச்சி என்பது அரசியலில் ஈடுபடாமல் எந்த ஒரு விஷயத்தையும் செய்யமுடியாது என்பதை நம்புகிறேன். ஆனால், எனது நாட்டுக்குச் சேவையாற்ற இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்தும் சரியான நேரத்தில் நடக்கும் என்று நம்புகிறேன் “

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.