மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் பயங்கர தீ!

Published:

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்தன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு ராஜ கோபுர பகுதியில் இருந்து இரவு 10:30 மணி அளவில் புகை வெளியேறியது. இரவு நடை அடைத்து புறப்பட தயாராக இருந்த ஊழியர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழியில் ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள கடைகளில் தீப்பிடித்தது தெரிந்தது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

madurai fire2 - 2026

தீயால் கட்டட சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேற்கூரை பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்தன. அங்கிருந்த பொது மக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகியும் தீயை அணைக்க முடியவில்லை.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

ஆயிரம் கால் மண்டம் அருகே இருந்த 17ஆம் நுாற்றாண்டை சேர்ந்த கதவு அதிர்ஷ்டவசமாக தீயில் தப்பியது. பின்னர் நேற்று நள்ளிரவு தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

madurai fire1 - 2026

இந்நிலையில், இன்று காலை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

madurai fire4 - 2026

தீவிபத்து ஏற்பட்ட கிழக்கு கோபுர நுழைவு வாயில் தவிர பிற வாயில்கள் வழியே பக்தர்கள் அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோயிலில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img