முக்கிய பகுதியில் காருக்குள் நடந்த கசமுசா! 2 பெண்கள் 3 ஆண்கள்.. சுற்றி வளைத்த போலீஸ்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
Screenshot_2020_0815_130805

சென்னையின் முக்கிய பகுதியான வேளச்சேரியில் சொகுசு காருக்குள் விபச்சாரம் செய்த மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை சுற்றிவளைத்து போலீஸ் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை வேளச்சேரி பகுதியில் 2 சொகுசு கார்கள் நீண்ட நேரமாக நிற்பதாகவும், அந்த காருக்குள் பாலியல் தொழில் நடப்பதாகவும் வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அதிரடியாக களத்தில் இறங்கிய வேளச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேளச்சேரியில் உள்ள கோவிலம்பாக்கம் என்ற பகுதியில் 2 சொகுசு கார்கள் அருகருகே நின்று கொண்டிருந்தது. அந்த காரின் அருகில் சென்று பார்த்தபோது ஒரு காரில் இரண்டு பெண்களும் மற்றொரு காரில் மூன்று ஆண்களும் இருந்தனர் என்பதும், அவர்கள் அனைவரும் விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது இதே கும்பல் அதே பகுதியில் உள்ள இன்னொரு வீட்டிலும் 5 பெண்களை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்து ஐந்து பெண்களையும் மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொழில் நடத்திய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் முக்கிய பகுதிகளில் 2 சொகுசு கார்களில் விபச்சாரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.