02 Oct28 dhoni - 2026

இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தல தோனி நேற்று ஒரு சாதனையை முறியடித்தார். அது நாலு நாளில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தது தான்! இதுதான் இப்போது ஒரே பேச்சாக இருக்கிறது

நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 114 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து தோனி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் மூலம் போட்டியையும் தொடரையும் இந்தியா பெறுவதற்கு முக்கியக் காரணியாகத் திகழ்ந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதம் அடித்து தொடர் நாயகன் விருது பெற்றார் தோனி.

தோனி இந்த சாதனையை நிகழ்த்திய போது அவருக்கு வயது 37 வருடம் 195 நாள்கள். கிரிக்கெட் வரலாற்றில் தொடர் நாயகன் விருது பெறும் மிக வயதான நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் தோனி. இதற்கு முன் இந்த சாதனையை சுனில் கவாஸ்கர் இலங்கைக்கு எதிரான போட்டியில் 1987இல் படைத்தார். அப்போது அவருக்கு வயது 37 வருடம் 191 நாட்கள். இந்த வகையில் 32 வருட சாதனையை முறியடித்திருக்கிறார் தோனி.

தோனி ஏழாவது தொடர் நாயகன் விருதை ஒரு தினப் போட்டிகளில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இவர் விராட் கோலி, சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், ஹசிம் ஆம்லா, விவியன் ரிச்சர்ட்ஸ், வில்லியர்ஸ் இன்னும் பல இந்தியர்களுடன் இணைந்து இருக்கிறார்

ALSO READ:  தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

விராட் கோலி கங்குலி யுவராஜ் சிங் ஆகியோருடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இணைந்திருக்கிறார் தோனி. முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 15 விருதுகளை 89ஆம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பெற்று உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending