சென்னை மாவட்டத்தில் 39.47 லட்சம் வாக்காளர்கள் : இறுதி பட்டியல் வெளியீடு

சற்றுமுன்
 
சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், 39 லட்சத்து, 47 ஆயிரத்து, 16 பேர் இடம் பெற்றுஉள்ளனர்.
 
கடந்த ஆண்டு செப்., 15ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 38 லட்சத்து, 28 ஆயிரத்து, 773 வாக்காளர்கள் சென்னையில் இருந்தனர். அதன் பின் நடந்த பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான சுருக்கமுறை திருத்தத்தில், 2,538 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 781 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக செப்டம்பரில் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் இருந்ததை விட தற்போது, ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 243 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இது, 3.09 சதவீதம் அதிகமாகும். புதிதாக சேர்க்கப்பட்டவர்களில், 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டும், 32 ஆயிரத்து, 208 பேர் உள்ளனர்.
 
அதில், ஆண்கள், 19 லட்சத்து, 62 ஆயிரத்து, 414 பேர், பெண்கள், 19 லட்சத்து 83, ஆயிரத்து, 766 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள், 836 பேர் அடக்கம். வேளச்சேரி தொகுதியில் அதிகபட்சமாக, 2 லட்சத்து, 96 ஆயிரத்து, 329 பேரும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 820 பேரும் இடம் பெற்றுஉள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு வரும், 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் முதல் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இந்த வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங் களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. மேலும் www.elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.