சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி பாஜக முகவருக்கு சிறப்புப் பயிற்சிகள்: ஹெச்.ராஜா

சற்றுமுன்
 
சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி முகவராகும் பாஜகவினருக்கு வரும் 26ஆம் தேதி முதல் சிறப்புப் பயிற்சிகளை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அளிக்க உள்ளனர் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் செய்தியாளர்களிடம் ஹெச். ராஜா நேற்று தெரிவித்ததாவது:
 
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராகவுள்ளது.தேர்தல் கூட்டணி குறித்து, கட்சி மேலிடமே முடிவுசெய்யும் என்றார். வரும் 26ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை பாஜக சார்பில் வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் முகவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
 
கட்சியின் மூத்த 10 தலைவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பயிற்சியை அளிப்பார்கள். பாஜக சார்பில் பிப்ரவரியில் 6 இடங்களில் யாத்திரைப் பயண நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில், ஒன்றியம், நகர்ப் பகுதிகளை இணைத்து பிரசாரம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதுபோன்ற பணிகளால் கட்சியை வலுப்படுத்துவோம். பிப்ரவரியில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழகத்தில் நடைபெறும் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர் என ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.