பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக அமித்ஷா மீண்டும் தேர்வா ?

சற்றுமுன்
 
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவின் பதவி காலம் நாளை (23-01-2016) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து பாஜக தலைவர் பதவிக்கு வருகிற 25-01-2016 அன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதுபற்றி பாஜக தலைமை அலுவலகம் வெளியிட்டு உள்ள தேர்தல் அறிவிக்கையில் ‘பாஜகவின் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் இருந்து வருகிற 24–ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம். இதன் மீதான பரிசீலனை மற்றும் விண்ணப்பங்கள் ஏற்பு அல்லது திரும்பப் பெறுதல் பகல் 1 மணி முதல் 1.30 மணி இடையே நடைபெறும். தேவைப்படும் பட்சத்தில் 25ந்தேதி காலை 10 முதல் 2 மணி வரை தேர்தல் நடைபெறும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
 
பிரதமர் மோடிக்கு, அமித்ஷா மிகவும் நெருக்கமானவர் என்பதால் ஒருமனதாக அவரே மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகின்றது.
 
பாஜக தலைவராக பதவி வகித்த ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் 9–ந் தேதி அமித்ஷா தலைவராக பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.