அதிமுக உறுப்பினர் அண்ணாமலை அட்டகாசத்தால் பரவும் டெங்கு காய்ச்சல்!

Published:

 
அதிமுகவை சேர்ந்த 196 வது வார்டு சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அண்ணாமலையின் அலட்சியமான, மெத்தனமான நடவடிக்கையால் சென்னையில் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
 
வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர்.மேலும் பெரும்பாலான பொதுமக்கள் அவர்களது சொந்த உடமைகள் அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். அதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த மக்களும் அடங்குவர்.
 
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு, பொதுமக்கள் பலியானதற்கு முக்கியமான காரணம் தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆளும் கட்சியினர் பணவெறி பிடித்து பல்வேறு முறைகேடு, அட்டகாசங்களை செய்ததே என்றும் தமிழக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசு கடந்த 1-12-2015 அன்று எந்தவித தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென்று திறந்து விட்டதுதான் சென்னை மாநகர வெள்ளப் பாழுக்குக் காரணம் என்றும், இந்த பேரழிவுக்குக் காரணமானவர்களைக் கண்டறிய நீதி விசாரணை வேண்டும் என்றும் கோரி கருணாநிதி ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியதாக ஏற்கெனவே தமிழகத்தை ஆண்ட திமுக கட்சியின் பொருளாளர் மு.க ஸ்டாலின் கூறி வருகிறார்.
 
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசின் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததால் அவர்களின் இயல்பு வாழ்க்கையில் தற்போது எவ்விதமான பாதிப்பும் இல்லை என ஆளும் அதிமுக அரசாங்கம் ஊடகங்களின் வாயிலாக ஒரு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு இதுநாள்வரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
 
ஒரு மாத காலம் கடந்தும் பல்வேறு மாநகராட்சிகளின் சுகாதாரத் துறை பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாமல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்களுக்கு தொற்று நோய்கள் பரவி டைபாய்டு, டெங்கு காய்ச்சல் போன்றவற்றுக்கு சிலர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் சுகாதாரப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முறையாக செலவிடாமல் செலவு செய்ததாக சிட்டையை போட்டு அதிகாரம் கொண்ட பணவெறி பிடித்து திரியும் பேய்கள் சுருட்டி விட்டன என்கிறது தமிழகம் !
 
அந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி 196வது வார்டுக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில், கக்கன் தெரு, சோழமண்டல தேவி நகர் போன்ற பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் இதுநாள்வரை அப்பகுதி வாழ்மக்களுக்கான அடிப்படை வசதி, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.
 
மேற்சொன்ன பகுதிகள் பணவெறி பிடித்த மாமன்ற உறுப்பினர் அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் தற்போது இருந்து வருகிறதாம். அவரின் அலட்சியமான, மெத்தனமான நடவடிக்கை போக்கால் அந்த பகுதிகளில் மழை நீர் வடியாமல் சாக்கடை நீர் மற்றும் கழிவு தேங்கி சென்னையில் டெங்கு மற்றும் தொற்று நோய் உருவாகியுள்ளதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
மேலும் பணவெறி பிடித்து உலகை வலம் வந்து சுற்றி திரியும் அண்ணாமலை அந்த பகுதியில் செய்யும் அராஜகம் மற்றும் அட்டகாசத்தை எவராலும் தாங்க முடியாதாம்.
196வது வார்டு மாமன்ற உறுப்பினர் எனும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அவரது பகுதியில் அரசுக்கு சொந்தமான பல இடங்களை ஆக்கிரமித்து கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு பண வேட்டை நடத்துகிறாராம்.
 
அப்பகுதியில் வசிப்பவர்கள் புதிய கட்டிடம் கட்டவோ, குழாய் இணைப்புக்காகவோ அல்லது வேறு எவ்விதமான மாநகராட்சி பணிகளுக்காகவும் அவரை மீறி நேரடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றால் எந்த காரியமும் கைகூடாதாம்.பண வெறி பிடித்த அண்ணாமலையை கவனித்தால் மட்டுமே எந்த காரியமும் கைகூடுமாம். முக்கியமாக மாநகராட்சி பணிகளை சட்டத்திற்கு புறம்பாக செய்து நிறைவேற்றி கல்லா கட்டுவதில் பலே கில்லாடியாம்..
 
அரசியல்வாதிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு மக்களின் வரிப்பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்து சொத்து சேர்த்து சினைப் பன்றி போல் குடும்பத்தினர் வயிற்றை வளர்த்து வருவதை நிறுத்துவது எந்நாளோ ? கடவுளுக்கே வெளிச்சம்.!
ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img