ஆசிபெறச் சென்ற பி.வி.சிந்துவுக்கு இந்த சங்கராசார்யர் என்ன சொன்னார் தெரியுமா?

Published:

pvsindhu sankaracharya - 2026

கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில், பாரதத்தின் தங்க மங்கை பி.வி.சிந்து, சங்கராச்சார்யரை சந்தித்து ஆசிபெறச் சென்றார். அப்போது அந்த சங்கராசார்யர் சொன்னது, இன்று பலித்திருக்கிறது. இதை ஆச்சரியத்துடன் பகிர்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

அடுத்தது தங்கம்தான்..! என்று அன்று சங்கராசார்யர் சொன்னது இன்று அப்படியே நடந்தேறியிருக்கிறது என்கிறார்கள்.

இரு வருடங்களுக்கு முன்னர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த பி.வி.சிந்து, வெள்ளிப் பதக்கத்துடன் கர்நாடக மாநிலம் ஹோஸ்நகர் ராமச்சந்திரபுரா மடத்துக்குச் சென்றிருந்தார். அங்கே ஸ்ரீசங்கராசார்யர் ஸ்ரீமத் ராகவேஸ்வர பாரதி சுவாமிகளிடம் வெள்ளிப் பதக்கத்தைக் காட்டி ஆசி பெற்றார்.

அப்போது சங்கராசார்ய சுவாமிகள், மடத்தின் தங்க நாணயத்தை அந்த வெள்ளிப் பதக்கத்தின் மேல் வைத்து, இந்த வெள்ளி இனி தங்கமாக மாறும் என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

சங்கராசார்யரின் அந்த வார்த்தை இன்று நிறைவேறியிருக்கிறது என்று மகிழ்ந்துபோயிருக்கிறார் பி.வி.சிந்து.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img