தமிழக அமைச்சருக்கு 3 வருட சிறை: முதல்வருடன் சந்திப்பு; தண்டனை நிறுத்தி வைப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
edappadi balakrishnareddy - 2026

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியில் பாலகிருஷ்ணா ரெட்டி நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாலகிருஷ்ணா ரெட்டி சந்தித்துப் பேசினார்.

பேருந்து கல்வீச்சு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியில் தொடர முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், தண்டனை நிறுத்திவைக்கப்பட்டாலும் வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டி குற்றவாளி என்பதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பில் பாலகிருஷ்ணா ரெட்டி நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவரது முறையீட்டை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்!

மேலும், ஒரு மாதத்திற்குள் உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. இது தற்போதைக்கு அவருக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.