December 7, 2025, 11:29 AM
26 C
Chennai

ஆப்ரேஷனில் அழுததால் அதுக்கும் பில்! அதிர்ச்சி தந்த மருத்துவமனை!

operation
operation

அமெரிக்காவில் தனது அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக பணம் வசூலித்ததாக ஒரு பெண் கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சை சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் நமக்கு முதலில் மனதில் தோன்றுவது பயம். அதுதான் மனிதனின் இயல்பு. அந்த பயத்தால் ஏற்படும் மன அழுத்தத்தால் நாம் கண்களில் கண்ணீர் நம்மை அறியாமல் வரும்,

சிலர் சத்தமாக அழுவார்கள், சிலர் மனதில் வைத்து கொள்வார்கள். இந்த அனுபவம் அறுவைசிகிச்சைக்கு முன் கிட்டத்தட்ட அனைவருக்கும் நடந்து இருக்கும்.

அபப்டி, அமெரிக்காவில் கூட ஒரு பெண் அறுவை சிகிச்சைக்கு முன் உணர்ச்சிவசப்பட்டு பயத்தில் அழுதுள்ளார். இதனால், மருத்துவமனை அந்த பெண்ணுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்தது.

Midge என்ற பெண் மருவை அகற்ற மருத்துவமனைக்கு சென்றார். சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்ற மருத்துவர்கள் தயாராக இருந்தபோது அந்த நேரத்தில் மிட்ஜ் பயத்தில் அழுதுள்ளார்.

பின்னர், அவருக்கு ஆறுதல் கூறி மருவை அகற்றினர். டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன் அந்த பெண்ணிடம் பில் கொடுக்கப்பட்டது. அதில், மொத்தம் 223 டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதில் 11 டாலர் அவள் அழுததற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அதில், இரண்டு டாலர் தள்ளுபடி வழங்கியதாகவும், அந்த பில் “ப்ரீஃப் எமோஷன்” என்ற பெயரில் வசூலிக்கப்படுவதாகக் இருந்தது. அதைப் பார்த்த மிட்ஜ் அதிர்ச்சியடைந்தார்.

முதன்முறையாக இதேபோன்ற பில்லை பார்த்ததாகவும், நான் இதை உலகிற்கு சொல்ல விரும்பினேன் என கூறி அந்த பில்லை தனது ட்விட்டர் கணக்கில் அப்பெண் வெளியிட்டார்.

இந்த பில்லை பார்த்த பல நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். சில நிமிடங்களில் அவரது பதிவு வைரலானது. பத்து மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் இருந்தன.

எட்டாயிரம் ரீட்வீட்கள் செய்யப்பட்டன. இது அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் நிலை என்று சிலர் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Entertainment News

Popular Categories