விவாகரத்துக்கு இதுதான் காரணம்: ஆமிர்கான்!

Published:

amir khan 2 - 2026

பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனது 2-வது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்

ஆமீர்கான் – கிரண் ராவ் இருவருமே இணைந்து இந்த விவாகரத்து குறித்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர். இதனால் இந்த தம்பதியின் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது..

amir khan - 2026

இந்த விவாகரத்துக்கு 29 வயது நடிகை ஒருவர் தான் காரணம் என்று சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது..

மேலும் அமீர்கான் மற்றும் பாத்திமா இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது..

இந்நிலையில் தனது விவாகரத்து முடிவு குறித்து நடிகர் ஆமீர் கான் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்..

amir - 2026

பிரபல ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் ” நான் மாற வேண்டும் என்று கிரண் ஒருபோதும் நினைக்கவில்லை.. எனது முதல் மனைவியான ரீனாவும் நானும் பிரிந்தபோது என் வாழ்க்கையில் யாரும் இல்லை.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
Amir khan 2 - 2026

ரீனாவிடமிருந்து விவாகரத்துக்கு முன்பு கிரணும் நானும் சந்தித்தோம் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையில்லை..

ரீனாவை பிரிந்த பிறகு, நானும் கிரணும் சந்தித்தோம்.. அதன் பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் நண்பர்களாக மாறினோம். அதன்பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டோம்..

amir 1 - 2026

கிரணை விவாகரத்து செய்த போது கூட யாரையும் நான் காதலிக்க வில்லை.. கிரணை பிரிந்த போது, என்னுடன் யாரும் இல்லை, இப்போதும் யாரும் இல்லை.

நான் கிரணும் உண்மையான குடும்பம் போல் இருப்பதாகவும், ஆனால் எங்களின் கணவன்-மனைவி உறவு ஒரு குறிப்பிட்ட மாற்றம் ஏற்பட்டது.. நாங்கள் திருமணம் என்ற உறவை நாங்கள் மதிக்கிறோம்.. நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். நாங்கள் நெருக்கமாக வாழ்கிறோம். ஆனால் நாங்கள் இனி கணவன்-மனைவி இல்லை, அதனால்தான் விவாகரத்து பெற முடிவு செய்தோம்..” என்று தெரிவித்தார்

Related articles

Recent articles

spot_img