நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

அடடே... அப்படியா? சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
dhony csk - 2026

இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸின் இன்றைய ட்ரெண்டிங். நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற மகாகவி பாரதியின் வரிகளை போட்டு, தோனிக்கு வாழ்த்து கூறியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்க்ஸ் டீம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பந்துகளை வீணடித்தார் என்றும், அடித்து விளையாடாமல் மெத்தனமாக செயல்பட்டார் என்றும் விமர்சிக்கப் பட்டது. அந்தப் போட்டியில் அவர் பத்தாயிரம் ரன்களைக் கடந்த வீரராக பெயர் பெற்ற போதும், அது சோகமான பெயராகவே விமர்சிக்கப் பட்டது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனி அணியின் வெற்றிக்காக நிலைத்து நின்று ஆடி, அரை சதம் கடந்து, கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து மிகச் சிறந்த வகையில் வெற்றி பெற போட்டியை நிறைவு செய்தார். இது பெரும் பாராட்டைப் பெற்றது. கேப்டன் கோலி, அவர் எப்போது எப்படி ஆடுவார் என்று யாருக்கும் தெரியாது! என்று புகழ்ந்தார்.

இந்த நிலையில், முதல் நாள் விமர்சனத்துக்கு மறு நாள் பதிலடி கொடுத்த தோனியைப் பாராட்டி, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெளியிட்ட இந்தப் புகைப்படம் இன்று பேசும் புகைப்படம் ஆகிவிட்டது!

csk - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.