Tamil News large 3061625 2 - 2026

இன்று முதல் தென்காசி வழியாக தாம்பரம் -நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கம்..

அடடே... அப்படியா?
Tamil News large 3061625 2 - 2026

மீன்டும் இன்று முதல் தென்காசி வழியாக தாம்பரம் -நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.நேற்றுமுதல் மீண்டும் இயங்கிய நெல்லை தாம்பரம் சிறப்பு ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது .

தீபாவளி, பொங்கல் பண்டிகை, கோடை விடுமுறை ஆகியவற்றை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சார்பில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தது. இதில் நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில்களுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் நெல்லை -மேட்டுப்பாளையம் ரெயில் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

அதைப்போல் தற்போது நெல்லை -தாம்பரம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து இந்த ரெயில் நேற்று 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நெல்லை – தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06004) 18-ந் தேதி முதல் வருகிற ஜனவரி மாதம் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தாம்பரம் – நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (06003) தாம்பரத்திலிருந்து இன்று திங்கட்கிழமை முதல் ஜனவரி மாதம் 30-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரெயில்கள் சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ரெயில் நிறுத்தங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயில்கள் தட்கல் கட்டணத்துடன், அதாவது 1.3 மடங்கு அதிக கட்டணத்துடன் இயக்கபட்டாலும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இரு சிறப்பு ரெயில்கள் மூலமாக இந்த 3 மாதங்களில் ரூ.2.5 கோடிக்கும் மேல் வருமானம் கிடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.