குழந்தைகள் கல்விக்காக இந்தாண்டில் 1.4 பில்லியன் டாலர் நிதி திரட்ட இலக்கு: மலாலா

சற்றுமுன்

சிரிய அகதிகளின் குழந்தைகளின்  கல்விக்காக  இந்தாண்டின் 1.4 பில்லியன் டாலர் திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளேன் என்று பெண் கல்விக்க போராடி வரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா தெரிவித்துள்ளார். சிரியாவில் 7 லட்சம் சிறுமிகள் ஜோர்டான் மற்றும் லெபனானில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களது கல்விக்கு உதவ நிதிதிரட்டும் பிரச்சாரத்தை மலாலா துவக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தான் பல சிரிய அகதிகளின் குழந்தைகளை சந்தித்து பேசியுள்ளேன். அவர்கள் வாழ்நாள் முழுவதும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். தற்போது நம்மால் அவர்களுக்கு உதவ முடியும் அவர்களுக்கு புத்தகங்கள், ஆசிரியர்கள் தேவை. அதற்காக இந்தாண்டில் 1.4 பில்லியன் டாலர் திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளேன்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.