வீரமணியின் பிடியில் இருந்து விலக வேண்டும்! ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவரின் ‘அட்வைஸ்’

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
stalin - 2026

வீரமணியின் பிடியிலிருந்து ஸ்டாலின் வெளியேற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அமெரிக்கை நாராயணன் கூறியுள்ளார்.

தொடர்ந்து இந்து சமய சடங்குகள், கலாச்சார சார்ந்த நடைமுறைகளை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து பொதுவெளியில் கண்ணை மூடிக் கொண்டு பேசி வருகிறார்.

இந்நிலையில் இஸ்லாமிய சமுதாய திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், இந்து திருமண விழாவில் அக்னி குண்டம் வளர்த்து, புகையை வளர்த்து அனைவரையும் அழ வைத்து சோக நிகழ்ச்சி ஆக்கிவிடுவார்கள் எனவும், சமஸ்கிருத மந்திரங்களின் அர்த்தங்கள் அசிங்கமானவை எனவும் கடுமையான விமர்சித்து பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

ஸ்டாலினின் இந்த இந்து மத விரோத பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அமெரிக்கை நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் ஸ்டாலின் இது போன்ற கருத்துக்களை பேசுவதை நிறுத்திவிட்டு திராவிட கழக தலைவர் வீரமணியின் பிடியிலிருந்து வெளியேறுவது அவருக்கு நல்லது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.