திமுக.,வை புறக்கணிப்போம்! எங்கள் ஓட்டு வேண்டாம் என்று ஸ்டாலினே பதில் சொல்..!

Published:

nellai reservation thanks - 2026

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கும் பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக., வழக்கு போட்டதும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் கனிமொழி கடுமையாக எதிர்த்ததும் சர்ச்சை ஆனது. இதனிடையே தங்களது ஓட்டு திமுக,.வுக்கு வேண்டாம் என்று ஸ்டாலின் பகிரங்கமாக சொல்லட்டும் என்று, முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கங்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளன.

திமுகவை புறக்கணிப்போம் என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. குறிப்பாக கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதி மக்களின் சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் “திமுகவை புறக்கணிப்போம்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் பிள்ளைமார் பிராமணர் நாயர் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ ஆஸ்டின் அவர்களே! திமுகவிற்கு எங்கள் வாக்கு வேண்டாமா ?

10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்?
உடனே பதில் சொல்லவில்லை எனில் திமுகவுக்கு எங்கள் ஓட்டு இல்லை

இவண்
பதிவு பெற்ற பிராமண சமுதாயம்
நாஞ்சில் நாட்டு பிள்ளைமார் சமுதாயம்
நாயர் சொசைட்டி சர்வீஸ்
கன்னியாகுமரி சட்டமன்றம் என்று குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img