35 ரன் வித்தியாசத்தில் கடைசிப் போட்டியை கைப்பற்றிய இந்தியா! தொடரை 4-1 என வென்றது!

Published:

indian cricket - 2026

இந்திய நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது, இதில், இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்று முதலில் விளையாடத் தொடங்கிய இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது, துவக்க வீரராகக் களமிறங்கிய ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து ஷிகர் தவான் 6 ரனும் சுப்மான் கில் 7 ரன்னும், தோனி ஒரு ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது

இந்நிலையில் அம்பத்தி ராயுடுவுடன் விஜய் சங்கர் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ரன்னை உயர்த்தினர். அம்பத்தி ராயுடு 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இதில் 4 சிக்சர்கள் 8 பவுண்டரிகள் அடங்கும் விஜய்சங்கர் 45 ரன் எடுத்தார் தொடர்ந்து கேதர் ஜாதவ் 34ம் கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா கலக்கலாக விளையாடி 22 பந்துகளில் 5 சிக்சர் இரண்டு பவுண்டரி உள்பட 45 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

இறுதிக்கட்டத்தில் புவனேஸ்வர் குமார் 6 ரன்கள் எடுக்க இந்திய அணி 45.1 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது

இதையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துயின் அணி துவக்க வீரரான நிகோலஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்னொரு வீரர் முன்றே 24 ரன்னும் வில்லியம்சன் 39 ரன்னும் எடுத்தனர்

ஆனால் ரோஸ் டெய்லர் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார் பின்னர் டோம் லாதம் 37ரன்னும் ஜிம்மி நீசம் 44 ரன்னும் எடுத்தனர் கோலின் டே கிராண்ட்டொம் 11, சாண்ட்னெர் 22 ரன் எடுத்தனர் அஸ்ட்லெ 10ம் மாட் ஹென்றி 17 ரன்னும் எடுத்தனர். இருப்பினும் அந்த அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களே எடுக்க முடிந்தது! இதையடுத்து அந்த அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாஹல் 3 விக்கெட் எடுத்தார்! கேதர் ஜாதவ் புவனேஸ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

ஏற்கெனவே மூன்று போட்டிகளில் வென்று இருந்த இந்திய அணி இந்த போட்டியின் வெற்றியையும் சேர்த்து நான்கு வெற்றியை பதிவு செய்தது முகமது சமி தொடர்நாயகன் விருதைப் பெற்றார்!

Related articles

Recent articles

spot_img