lion 1 - 2026

சிங்கத்திடம் சீன் போட்டு சின்னாபின்னமான நபர்!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
lion 1 - 2026

வனவிலங்குகள் தொடர்பான வீடியோ மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் தற்போது சிங்கத்தின் வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜமைக்காவில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் உயிரியல் பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அங்கு கூண்டில் சிங்கம், புலி, கரடி, அரியவகை குரங்கு உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகிறது. அவ்வாறு பராமரிக்கப்பட்டு வரும் சிங்கத்திடம் ஊழியர் ஒருவர் சேட்டை செய்து விரல்களை இழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஜமைக்காவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு வந்த பார்வையாளர்களைக் கவரும் வகையிலும், அவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிங்கத்திடம் தான் விளையாடும் வீடியோ வைரலாகும் என்ற நோக்கத்திலோ சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

இரும்பு வேலிக்குள் இருந்த சிங்கத்தின் முகத்தில் தனது கையால் வருடி விடுவது போலவும், தள்ளுவது போலவும் அந்த ஊழியர் செய்து கொண்டிருந்தார்.

சிங்கமோ, சின்னஞ்சிறு பிள்ளை என்று அவரை நிராகரித்துக் கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் கடும் கோபமடைந்த சிங்கம் அவரது கை விரல்களை கடித்தது. அவர் வலியால் அலறி துடித்தார். தற்போது விரல்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.