கர்நாடக பாஜக வெற்றியை கொண்டாடும் வேளையில் இந்தியாவில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது வருத்தம்: ராகுல்காந்தி

இந்தியா சற்றுமுன்

03 May17 ragul - 2026கர்நாடக பாஜக வெற்றியை கொண்டாடும் வேளையில் இந்தியாவில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திடுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. சட்ட ஆலோசனைகளை நடடத்திய ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட ராகுல்காந்தி, பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். பாஜக, வெற்றியை கொண்டாடும் வேளையில், ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியா வருத்தம் அளிக்கிறது” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.