கும்கி யானை ஆகிவிட்டாரா? திமுக.,வுக்கு பலரை இழுத்துவர படாதபாடு படும் செந்தில் பாலாஜி!

அடடே... அப்படியா? திருச்சி
karur vskumar - 2026

கரூர்: கரூரைக் கலக்கிக் கொண்டிருந்த செந்தில் பாலாஜி இப்போது திமுக.,வுக்கு ஆட்களைக் கொண்டு சேர்க்கும் கும்கி யானை ஆகிவிட்டார். இதற்காக பலருக்கும் வலைவீசி வருகிறார்.

அமமுக., துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் உரசல், பதவி விவகாரம், உள்கட்சி மோதல் என பல்வேறு காரணங்களை முன்வைத்து, அக்கட்சியில் இருந்து விலகி, திமுக.,வில் சேர்ந்தார் செந்தில் பாலாஜி. தனியாக அல்லாமல் ஆயிரக்கணக்கில் மக்\களையும் கொண்டு போய் சேர்த்தார்.

தொடர்ந்து அமமுக.,வில் இருக்கும் பலமுள்ள நபர்களுக்கு வலைவீசி வருகிறார். அமமுக.,வில் எதுவும் தேறாது, என்று சொல்லியே திமுக.,வுக்கு இழுத்துக் கொண்டிருக்கும் செந்தில்பாலாஜியின் லேட்டஸ்ட் வலைவீச்சு அவரது நெருங்கிய நபர்தான்.,

தோல்வி பயத்தால்தான் ஸ்டாலின் இது போன்று வேற்று கட்சி நபர்களை இழுக்கிறார் என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்தாலும், அமமுக.,வில் இருந்து வெளியேறி வரும் நபர்கள் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.

கரூர் மாவட்ட பொருளாளர் வி.ஜி.எஸ்.குமார் இன்று காலை சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திமுகவில் இணைந்துள்ளார். காரணகர்த்தா செந்தில் பாலாஜிதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.