
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபிய இளவரசரின் சொந்த விமானத்தில், இம்ரான்கான் அமெரிக்கா வருகை தந்திருந்தார்.
அதே விமானத்தில் இம்ரான்கான் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். ஆனால், சில மணி நேரங்களிலேயே இம்ரான்கான் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் நியூயார்க் கென்னடி விமான நிலையத்திற்கே திரும்பியது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்ய முயன்றனர். ஆனால், அதை சீர் செய்ய கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் முன்பு தங்கியிருந்த ஹோட்டலுக்கே இம்ரான்கான் திரும்பினார்.



