பிரபல நடிகர் கலாபவன் மணி கொச்சியில் காலமானார்

சற்றுமுன்

பிரபல நடிகர் கலாபவன் மணி நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக அவதிபட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று திடீரென்று சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணியளவில் கலாபவன் மணி உயிர் பிரிந்தது.

மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தில் போலீசாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் தேசிய விருது, கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.