மதுரை பழங்காநத்தம் அருகே வெடித்த நாட்டு வெடிகுண்டு! மக்கள் அதிர்ச்சி!

கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை

madurai bomb - 2026மதுரை பழங்காநத்தம் மகாலட்சுமிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு ஒன்று இன்று கலை வெடித்தது. அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு பெரும் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்!

மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி வரை புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.  இந்தநிலையில் மதுரை பழங்காநத்தம் மகாலட்சுமி புரத்தில் நடைபெற்று வரும் போடி ரெயில்பாதை அருகில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது.

மனித சேதம்-பொருட்சேதம் இல்லை என்றாலும், இது தொடர்பாக ரெயில்வே காவல்துறையினர் மற்றும் சுப்பிரமணிய புரம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.