ஸ்டாலின் நீங்கதான் அடுத்த சிஎம்! ராகுல் நீங்கதான் அடுத்த பிஎம்!

சற்றுமுன் தமிழகம் நெல்லை

IMG 20190313 WA0025 - 2026

ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என நாகர்கோவிலில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சுசியுள்ளார்…!

அதற்கு முன்பு பேசிய ஸ்டாலின் இன்னும் சில வாரங்களில் ராகுல் தான் பிரதமர் என தைரியமாகப் பேசியுள்ளார்.

கருணாநிதி மறைந்தாலும் அவரது கொள்கை தமிழகத்தை எப்போதும் வழிநடத்திக் கொண்டிருக்கும் … தமிழ் கலாசாரத்திற்கும் தமிழ் மொழிக்கும் பிரதமர் மோடியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார் ராகுல் காந்தி.!

தமிழ் மொழிக்கும் கலாச்சாரத் திற்கும் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது, தமிழக அரசு மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது … என்றார் ராகுல்!

நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து இருக்கிறேன் -அவரை சந்தித்து எனக்கு பெரிய மகிழ்ச்சி அளித்தது,

கருணாநிதியிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன் –

கருணாநிதி திமுகவை இப்போதும் வழி நடத்தி வருகிறார் – அவர் நம்முடன்தான் வாழ்ந்து வருகிறார், தமிழகத்தின் வளர்ச்சியில் இரண்டற கலந்தவர்  கருணாநிதி

2019 தேர்தல் தமிழக மக்களின் உரிமை குரலாக இருக்கும் -தமிழக அரசு மோடியின் கைப்பாவையாக உள்ளது –

தமிழக மக்களுக்கும், தமிழுக்கும் மோடியால் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது –

மத்தியில் இருந்து கொண்டு மாநில அரசுகளை மோடி அடக்கி ஆள்கிறார்.

மோடியால் தமிழ்நாட்டை இனியும் கட்டுப்படுத்த முடியாது.

தமிழக மக்கள் அதை எப்போதும் அங்கீகரிக்க மாட்டார்கள்.

தமிழக மக்கள் போராட்ட குணம் கொண்டவர்கள்.

உண்மையை காக்க தமிழக மக்கள் உயிரையும் கொடுப்பார்கள்.

பிரதமர் மோடிக்கு பொய் பேசுவது மட்டுமே வேலை,

மோடி ஆட்சிக்கு வரும் முன் ரூ.15 லட்சம் அளிப்பதாக கூறினார், ஆனால் அவர் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை, மக்களை வறுமையில் தள்ளி இருக்கிறார். .

இப்படி எல்லாம் துண்டுச்சீட்டு வைத்துப் பேசி…இருவரும் பரஸ்பரம் பதவிகளைக் கொடுத்துக் கொண்டனர்.

1 thought on “ஸ்டாலின் நீங்கதான் அடுத்த சிஎம்! ராகுல் நீங்கதான் அடுத்த பிஎம்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.