தஞ்சாவூர் குடமுழுக்கு: மாணவர்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கம்!

அடடே... அப்படியா? ஆலயங்கள் சற்றுமுன் தமிழகம்
tanjor - 2026

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் புராதாண அடையாளங்களில் முக்கியமான ஒன்றான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது.

govt bus - 2026

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலின் குடமுழுக்கு விழாவை காண தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சாவூருக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

school - 2026

மேலும் பெரிய கோவிலை பார்க்க பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் ஏறினாலே அவர்கள் பயண சீட்டு இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.