தென்காசியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் இன்று மாலை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே இன்று மாலை பாஜக இந்து முன்னணி மற்றும் ஹிந்து இயக்கங்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்
முன்னதாக, பேரணியை முன்னிட்டு, தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் உள்ள 29 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோதிகள் இந்தப் பொதுக் கூட்டத்துக்கு வருபவர்களைக் குறிவைத்து அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்றும் கருதி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
மேலும், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள வங்காளதேச பயங்கரவாத முஸ்லிம்களை வெளியேற்றவும் நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரசாரம் செய்து வரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி வரவேண்டியும் தொடர் பிரார்த்தனைகளை இந்து முன்னணி மேற்கொண்டு வருகிறது.
தென்காசியில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசினார். அவர், இத்தகைய கூட்டத்துக்காக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.