மூங்தால் பக்கோடா

Published:

paasiparuppu - 2026

மூங்தால் பக்கோடா

தேவையான பொருட்கள்
தோல் நீக்கிய பாசிப் பருப்பு            – 1/2 கப்
மிளகாய் துாள்                               – 1/2 டீ ஸ்பூன்
சீரகத் துாள்                                    – 1/2 டீ ஸ்பூன்
சோம்பு துாள்                                   – 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயத் துாள்                          – ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய்                               – 1
முந்திரி                                          – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்                                    – 1
அரிசி மாவு                                     – 1/2 கப்
நறுக்கிய கொத்தமல்லி                   –  சிறிது
உப்பு, எண்ணெய்                            – தேவையான அளவு

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

செய்முறை

moong dhall pakkota - 2026

பாசிப் பருப்பை தேவையான அளவு நீர் ஊற்றி, ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை முழுவதும் வடித்துவிட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், முந்திரி, மசாலாப் பொருட்களைச் சேர்த்து, அரிசி மாவையும் போட்டு, பிசையவும். வடை மாவை விடவும், சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, மிதமான சூட்டில், சிவக்கப் பொரித்து எடுக்கவும். கொத்தமல்லி, புதினா சட்னி அல்லது விரும்பிய சாஸ் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Related articles

Recent articles

spot_img