இந்த மாபெரும் கூட்டத்துக்காக… ஸ்டாலினுக்கு நன்றி: நயினார் நாகேந்திரன்!

Published:

nainar nagendran1 - 2026

தென்காசியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் இன்று மாலை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே இன்று மாலை பாஜக இந்து முன்னணி மற்றும் ஹிந்து இயக்கங்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் இல கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

nainar nagendran - 2026

இந்தக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது…

இத்தகைய கூட்டத்துக்காக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்கிறேன்!இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று ஸ்டாலினின்  அப்பா பேசுவார். எந்தக் கட்சி யில் சேரலாமென நினைத்த போது பாஜகவில் சேர முடிவு செய்தேன். தூய கட்சியாக பாஜக இருக்கிறது. நான் எடுத்த முடிவு சரியான முடிவு என்பதை இப்போது உணர்கிறேன்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 5 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுவிடும் என நம்பி இருந்த காலத்தில் 10 ஆயிரம் ருபாய் என்ற பொய்யான வாக்குறுதி காரணமாக அவர்கள் வெற்றி பெற்றார்கள். இனியாவது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்து விடாதீர்கள். வரும் தேர்தலில் பாஜக நிச்சயம் மிகப் பெரும் வெற்றி பெறும்.

இந்துக்கள் ஒற்றுமை இல்லாமல் இருந்தனர். ஜாதியால் பிரித்து வந்த காலம் மாறி இனி அனைவரும் ஒரே இனம் ஒரே குலம் என்ற எண்ணத்தில் செயல்படுவோம். பாரத நாடு நம்மை விட்டு போய் விடக்கூடாது. இந்தியா எல்லா நாட்டவருக்கும் சொந்தமல்ல; அனைவரும் வந்து போகலாம்.

tenkasi bjp meeting3 - 2026

உலக பொருளாதாரத்தை தன் பிடியில் வைத்துள்ள சீன நாட்டு அதிபர், மோடி அழைத்தால் வருவார். பாகிஸ்தான் இந்தியாவோடு இணையும் காலம் வரும்.

நம் ஊரில் இஸ்லாமிய நண்பர்கள், கிறிஸ்தவ நண்பர்கள் உள்ளனர். வெளிநாட்டுக்கு போகிறோம் என்றால் அந்த நாட்டு தூதரகத்தில் விண்ணப்பித்து அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே போக முடியும். பாகிஸ்தானில் இருந்து பிரிவினையின் போது ரயிலில் ஏற்றி அனுப்பப்பட்ட இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

குடியுரிமைச் சட்டம் இப்பொழுது பாகிஸ்தான் நாட்டினர் மட்டுமல்ல.. அனுமதியில்லாமல் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. சி.ஏ.ஏ.,க்கு எதிரான போராட்டத்தினை நடத்தும் சில அமைப்புகள் பின் ஸ்டாலினே இருக்கிறார்…. என்று பேசினார் நயினார் நாகேந்திரன்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img