ப்ளீஸ்… இந்து தலைவர்கள் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள்: மோடி முன் குவியும் கோரிக்கைகள்!

Published:

ranjeet kamalesh tiwari - 2026

அன்புள்ள மோடிஜி, அனைவரையும் நம்மால் சமாதானப் படுத்த முடியாது. சப்கா சாத் மற்றும் சப்கா விஸ்வாஸ் என்பதை நிறைவேற்ற, உங்கள் மீது ஏற்கெனவே விஸ்வாசத்தைக் காட்டியவர்களை மறந்துவிடாதீர்கள். அறிவுகெட்டத் தனமான ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள், இந்து இயக்கத் தலைவர்களின் படுகொலைகள் நிச்சயம் இப்போது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது ஐயா. தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள்….

இப்படித்தான் கோரிக்கைகளை விடுத்து வருகின்றார்கள் பலர் தங்கள் டிவிட்டர் பதிவுகளில்! காரணம், நேற்றும் இந்து இயக்கத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

பார்க்க… செய்திகள் : சிஏஏ., என்ஆர்சி., ஆதரவாக கூட்டம்! விஸ்வ ஹிந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை!

நபி குறித்துப் பேசி பத்வா போடப்பட்ட இந்து மகா சபை முன்னாள் தலைவர் கமலேஷ் திவாரி கொடூரக் கொலை!

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

கமலேஷ் திவாரி முஸ்லிம்களால் கொலை! இந்து மகா சபை இரங்கல்!

சிஏஏ., என்.ஆர்.சி., ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்றும், இது இந்தியாவுக்கு வெளியில் அவதிப்படும் அண்டைநாட்டு சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கானது மட்டுமே என்றும் மத்திய அரசு சொல்லிக் கொண்டிருக்கும் போது, அதுகுறித்து பெரிய அளவில் பிரசாரம் செய்து தங்கள் தரப்பு நியாயத்தை மக்களிடம் விளக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாங்களால் நாட்டில் சிறுபான்மை சமூக மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார்கள் என்று வெறுமனே அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

தங்களது தரப்பு நியாயமானது என்று மத்திய அரசு நினைத்தால், இது போன்று தவறான பிரசாரம் செய்யும் எதிர்க்கட்சிகள் மீது நீதிமன்றம் மூலம் சரியான நடவடிக்கை எடுத்து அவர்களை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியிருக்க வேண்டும். அல்லது, எதிர்க்கட்சியினர், மற்றும் சிறுபான்மை மக்களை தூண்டிவிட்டு, நாட்டில் பதற்ற நிலையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கும் மௌல்விகள், ஜமாத்கள், வெளிநாட்டு கூலிப்படை பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் உள்ளிட்டோருக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சிறுபான்மை மக்களைத் தூண்டிவிட்டு தெருக்களில் ஒவ்வொரு நாளும் பிரசாரங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பிரிவினைவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருக்கும் மத்திய அரசு, பின் எதற்காக தேசப் பாதுகாப்பில் இந்த அரசு முதன்மையான கவனம் செலுத்துகிறது என்று வெறுமனே அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என்ற கேள்வி நம்மில் எழுவது நியாயமானதே!

எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களை அடக்க இயலாமலும், பிரிவினைவாதிகளின் பிரசாரத்தை ஒடுக்க முடியாமலும், அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தூண்டுதலை தடுக்க முடியாமலும், பொய்களை வேண்டுமென்றே பரப்பி வரும் ஊடகங்களைக் கையாளமுடியாமலும் அரசு தவித்து வரும் நிலையில், இந்து இயக்கங்களின் தலைவர்கள், நாட்டின் நலம் விரும்பிகள், உண்மையை எடுத்துரைத்து தேசத்தை அமைதிப்படுத்த விரும்பும் தேசபக்தர்கள் தாங்களாகவே களத்தில் இறங்கி சிஏஏ., என்.ஆர்.சி குறித்து பொதுமக்களிடம் விளக்கி வருகின்றனர்.

அவ்வாறு செயல்படும் சேவகர்களைக் குறிவைத்து பிரிவினைவாதிகள் இயங்கி, சுட்டுக் கொன்று மேலும் சமூகப் பதற்றத்தையும் அச்சவுணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

இது திருச்சியில் நடைபெற்ற விஜயரகுவின் படுகொலை ஆகட்டும், நேற்று நடைபெற்ற ரஞ்சீத் பச்சனின் படுகொலை ஆகட்டும்… எல்லாமே சிஏஏ., என்.ஆர்.சி.,க்கு ஆதரவாக விளக்கக் கூட்டம், நோட்டீஸ் விநியோகம் செய்து வந்த நபர்கள் மீதான தாக்குதலே! நியாயமாகப் பார்த்தால் அரசு இத்தகைய பிரசாரங்களை செய்திருக்க வேண்டும், ஆனால் அரசுக்காகப் பரிந்துகொண்டு உண்மையை விளக்கிக் கொண்டிருக்கும் தேச பக்தர்கள் மீதான தாக்குதலைக் கூட தடுக்க முடியாமலும், நடவடிக்கை எடுக்க இயலாமலும் மத்திய அரசு தவித்து வருவது வெட்கப்பட வேண்டிய ஒன்று! வேதனையானதும்கூட!

இதனை ஆட்சியில் இருக்கும் அரசு உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை என்பதுதான் தேசபக்தர்களின் உள்ளக் குமுறல். வலிமையான தலைவர் என்று மக்களால் நம்பப் படும் பிரதமர் மோடியும், உறுதியான உள்துறை அமைச்சர் என்று கூறிக் கொள்ளும் அமித்ஷாவும் இனியும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், இத்தகைய நற்பெயரை அவர்கள் மக்களிடம் இழக்க வேண்டியிருக்கும்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img