சீர் கொடுத்து சீராட்ட வேண்டிய தாய் மாமன்.. சீர் குலைத்து சின்ன பின்னமாக்கிய சோகம்!

இந்தியா கிரைம் நியூஸ்
vankodumai - 2026

பள்ளி விடுமுறை நாட்களில் தாத்தா, பாட்டி, மாமா வீட்டிற்கு சென்று பல நாட்கள் தங்கியிருந்து பிள்ளைகள் விளையாடி விட்டு வீடு திரும்பும். ஆனால் விடுமுறை நாட்களில் மாமா வீட்டிற்கு சென்ற சிறுமியை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் நிகழ்ந்ததுள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தன் சகோதரி மகளான சிறுமியை, டிசம்பர் மாதம் குஜராத்துக்கு பள்ளி விடுமுறைக்காக ஒருவர் அழைத்து சென்றார்.

பின்னர் அச்சிறுமி அவரது மனைவியால் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டார். இதனையறிந்து மகளை மீட்ட பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில், சிறுமி தாயாரின் சகோதரரும் அவரது மனைவியும் அகமதாபாத்தின் சோலா பகுதியில் பாலியல் தொழில் நடத்தி வந்ததால் தனது மகளையும் அதில் ஈடுபடுத்தியதாக கூறினார்.

சிறுமியின் உறவினரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கின்றனர். இதனிடையே, கடந்த வாரம் அந்த வீட்டிலிருந்து சிறுமி தப்பித்து வந்ததாக கூறினர்.

இதனையடுத்து உறவுகார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் கணவர் – மனைவியை தேடி வருகின்றனர்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.