நபி குறித்துப் பேசி பத்வா போடப்பட்ட இந்து மகா சபை முன்னாள் தலைவர் கமலேஷ் திவாரி கொடூரக் கொலை!

Published:

lko Kamlesh tiwari - 2026

இந்து மகா சபை தலைவர் கமலேஷ் திவாரி நபி குறித்து அவதூறாக பேசினார் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை அவரின் தலையை எடுப்பவர்களுக்கு 51 லட்சம் சன்மானம் என ஃபத்வா 2015 ல் பிறப்பித்தனர். இன்று கமலேஷ் திவாரி கொலை!

இந்து மகாசபா முன்னாள் தலைவரும் இந்து சமாஜ் கட்சியின் நிறுவனருமான கமலேஷ் திவாரி லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகக் கொல்லப் பட்டுள்ளார். வெளியான தகவல்களின்படி, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது கழுத்துப் பகுதியில் வெட்டப்பட்டுள்ளார்.

லக்னோவில் உள்ள நாகா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்து சமாஜ் கட்சியின் குர்ஷித் பேக் அலுவலகத்தில் திவாரி இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. கொலைகாரர்களில் ஒருவர் காவி ஆடை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

கொலை நடந்த இடத்தில் இருந்து ஒரு ரிவால்வரை போலீசார் மீட்டுள்ளனர். தொடக்கக் கட்ட விசாரணையில், கொலையாளிகள் திவாரிக்கு தாங்கள் தெரிந்தவர்கள் என்று கூறியுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

திவாரியைச் சந்திக்க வந்த இரண்டு பேரும் பாக்கெட் இனிப்புகளுக்குள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தனராம். அவர்கள் திவாரி மீது தாக்குதல் தொடுத்து, உடனே அங்கிருந்து ஓடி விட்டனர். திவாரி உடனடியாக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

முகமது நபி குறித்து பாலியல் ரீதியாக விமர்சனத்தை எழுப்பியதாக, 2015 ஆம் ஆண்டில் கமலேஷ் திவாரி அப்போதைய அகிலேஷ் யாதவ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்.

திவாரிக்கு மரண தண்டனை கோரி தியோபந்த், சஹரன்பூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள முஸ்லிம் குழுக்கள் பெரிய அளவில் கலவரங்களையும் போராட்டங்களையும் நடத்தியிருந்தன.

இதை அடுத்து திவாரி சிறையில் இருந்தார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தது. செப்டம்பர் 2016 இல், அலகாபாத் உயர் நீதிமன்றம் இறுதியாக அவர் மீதான என்எஸ்ஏ குற்றச்சாட்டுகளை ரத்து செய்தது! அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஆயினும், முகமது நபி குறித்த கருத்துக்களுக்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கையை அகிலேஷ் எடுத்தது, அது தொடர்பாக கமலேஷ் திவாரி மீதான கைது, தொடர்ந்து அவருக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை, நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக இந்து குழுக்களிடையே இது கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதே நேரம், மேற்கு வங்காளத்தின் மால்டாவின் கலியாசக்கில், திவாரி கருத்துக்கு எதிராக ‘எதிர்ப்புத் தெரிவிக்கையில்’ முஸ்லிம்கள் பரவலான வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர். திவாரியின் பேச்சுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கலவரக்கார முஸ்லிம்கள் கலியாசக்கில் கூடி, கடைகளை சூறையாடி, பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்! கலவரக்கார முஸ்லிம்களால் ஒரு காவல் நிலையமும் தீக்கு இரையானது.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று எஸ்பி தலைவர் அசாம் கான் கூறியதைத் தொடர்ந்து, முகமது நபி உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் என்று திவாரி கருத்து தெரிவித்திருந்தார். திவாரியின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவருக்கு எதிராக பத்வா விதிக்கப் பட்டது. இந்நிலையில், திவாரி இன்று படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img