திமுக.,வின் தேர்தல் நாடகம்! பலிகடா ராதாரவி: சீறும் தமிழிசை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

tamilisai soundarrajan 1 - 2026

திமுக.,வில் இருந்து நடிகர் ராதாரவி நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் நேரத்து நாடகம் என்று திமுகவை விமர்சித்துள்ளார் பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

‘கொலையுதிர் காலம்’ திரைப்பட அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து கொச்சையாகப் பேசி அது சமூக வெளியில் சர்ச்சை ஆனதால், அவரை திமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக திமுக., அறிவித்தது. மேலும், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் கட்சி என்றும் அது கூறிக் கொண்டது. திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவரும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தூத்துக்குடி வேட்பாளருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல் நேரத்து நாடகம்.ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பலஆண்டுகளாக திமுக மேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பெண்மையை பழிப்பது திமுகவின் வாடிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அந்நாள் முதல்வர் முதல் கழகப் பேச்சாளர் வெற்றிகொண்டான் வரை பேசிய பேச்சுக்கள் அச்சில் ஏற்றமுடியாத தரம்? என்பதை நாடறியும்.ஜெ.அவர்களை சட்டமன்றத்தினுள்ளே அடித்து உதைத்தவர்கள் திமுகவினர்.நீங்கள் செய்வது தேர்தல் காலத்து நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்
– என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.