ரவிசங்கர் பிரசாத் முன் பீகாரில் பாஜக.,வினரிடையே கோஷ்டி மோதல்!

இந்தியா சற்றுமுன்

ravi sankar prasad e1536641421908 - 2026

பீகாரில் பாஜக.,தொண்டர்கள் இடையே லேசான மோதல் ஏற்பட்டதன் காரணமாக பாட்னா விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது.

பீகார் மாநிலம் பாட்னாசாஹிப் தொகுதியில் பாஜக.,வேட்பாளராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். முன்னர் இத்தொகுதி சத்ருகன் சின்ஹா வசம் இருந்தது.

இந்நிலையில் இத்தொகுதியில் போட்டியிட மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஆர்.கே.சின்கா வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக ரவிசங்கர் பிரசாத்துக்கு தொகுதி ஒதுக்கப் பட்டது. இதனால் ஆர்கே சின்ஹா ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று பாட்னாவில் வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில், அவர் விமான நிலையம் வந்திருந்தார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் வந்திருந்தனர். அதே நேரம், ஆர்கே சின்காவின் ஆதரவாளர்கள் கறுப்புத் துணியுடன் வந்து எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே லேசாக வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Supporters of senior #BJP leaders — Union Minister #RaviShankarPrasad and #RajyaSabha member #RKSinha — clashed outside the #Patna airport after the party decided to field Prasad from the Patna Sahib Lok Sabha seat.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.