நடிகன் பேச்சு, அடுத்த படம் வந்தா போச்சு! : சர்கார் விஜயின் சிகரெட் ‘சீக்ரெட்’ அவமானம்!

Published:

vijay anbumani - 2026

நடிகர் விஜய்யின் சர்க்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சையைத் துவக்கி வைத்து, சர்க்காருக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் சர்க்கார். இந்தத் தலைப்பு இரு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. நடிகர் விஜய்யின் பிறந்த நாள் நேற்று என்பதால், அதை முன்னிட்டு இது வெளியிடப் பட்டதாகக் கூறப்பட்டது.

சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் இருப்பதற்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறிவிட்டார் என்பதையும் பழைய சம்பவத்தை சுட்டிக்காட்டி அவமானம் என குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமை தாயகம் அமைப்பும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு’ என்ற நிகழ்ச்சியின்போது, நடிகர் விஜய்யிடம் “ரஜினி காந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதேபோல் விஜய்யும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் அன்புமணி ராமதாஸ்.

 

“அன்புமணி ராமதாஸின் கருத்தை நான் வரவேற்கிறேன். புகைப் பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம், ஆரோக்கியமான விஷயம். அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனி புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்.” என்றார் விஜய். ஆனால், தற்போது அந்த உறுதிமொழியை மீறி சர்கார் படத்தில், சிகரெட் பிடிப்பது போல் போஸ் கொடுத்துள்ளார் விஜய்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

vijay cigarette - 2026

முன்னர், 2012ஆம் ஆண்டு வெளியான ‘துப்பாக்கி’ படத்தின் போஸ்டரிலும் விஜய் இவ்வாறு சுருட்டு பிடிப்பது போன்று இடம் பெற்றிருந்தது. துப்பாக்கி, சர்கார் இரண்டு படங்களின் இயக்குநரும் ஏ.ஆர்.முருகதாஸ். இருப்பினும், இது தன் படம் இல்லை என்று விஜய் ஒதுங்கிக் கொள்ள முடியாது. சினிமாக் காட்சிகளில் சொல்லும் வசனம் போல், நான் வெறுமனே சிகரெட்டை வாயில்தான் வைத்திருந்தேன். பத்த வைக்கவில்லையே என்று ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது. துப்பாக்கி போஸ்டரில் சிகரெட்டில் இருந்து புகை வந்ததுபோல் போஸ்டர் இருந்தது. இந்த போஸ்டரில் அப்படி இல்லை என்று மழுப்பவும் முடியாது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img