நெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் முடிந்து பல மாதங்களாகியும் இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இப்படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஒருபுறம் இப்படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என தயாரிப்பு தரப்பும், ஓடிடியில் வெளியாகிறது என தொடர்ந்து செய்திகளும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸ் வாங்கிவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ படத்தை தியேட்டரில் வெளியிடுவதா இல்லை ஓடிடியிலா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தியேட்டரில் மட்டுமே ரிலிஸ் எனகூறி வந்த தயாரிப்பு தரப்பு தற்போது மனம் மாறியிருப்பதாக தெரிகிறது. எனவே, விரைவில் ஒடிடியில் மாஸ்டர் வெளியாகலாம் என கருதப்படுகிறது.

உண்மையில் மாஸ்டர் படத்தை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். ஆனால், நாட்கள் தள்ளி தள்ளி போவது தயாரிப்பாளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.