செல்போன் திருடனை மடக்கிபிடித்த உதவி ஆய்வாளார் – நிஜ ஹீரோ என பாராட்டிய காவல் ஆணையர்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை வீடியோ

சென்னையில் செல்போன்களை பறித்து செல்லும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்திலும், சாலையில் நடந்து செல்லும் போதும் லாவகமாக அவர்கள் செல்போன்களை திருடி செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில சமயம் கொலைகளில் கூட முடிவதுண்டு..

இந்நிலையில், சென்னையில் திருட்டு பைக்கில் செல்போனை திருடிக்கொண்டு சென்ற ஒருவனை, உதவி காவல் ஆய்வாளர் பைக்கில் விரட்டிப்பிடித்துள்ளார். இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள காவல் ஆணையர் ‘இது சினிமா காட்சி அல்ல. தனி மனிதராக செல்போன் திருடனை நிஜ ஹீரோ உதவி ஆய்வாளர் ரமேஷ் வளைத்து பிடித்துள்ளார். 3 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்களை மீட்டுள்ளோம்’என பதிவிட்டுள்ளார்.

அந்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.