திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 14 லட்சத்தில் புதிய ஆம்புலன்ஸ், ட்ராலி வசதியை விமான நிலைய இயக்குனர் குணசேகரன் துவக்கி வைத்தார்.
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்கனவே உருவாக்கப்பட்டு வந்தது. இதனை நவீனமயமாக்கும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் திருச்சி விமானநிலையத்திற்கு வாங்கப்பட்டு இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி விமான நிலைய பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதிய ஆம்புலன்ஸ் சாவியினை விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஓட்டுனரிடம் கொடுத்து அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான 100 புதிய ட்ராலி களும் (ரூபாய் 10 லட்சம் மதிப்பில்) கஸ்டம்ஸ் பகுதியில் பயன்படுத்துவதற்காக ரூபாய் 1.2 லட்சம் மதிப்பில் செக்யூரிட்டி ட்ராலிகளையும் இயக்குனர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ஜோஷி பிரான்சிஸ், முனையம் மேலாளர் ஜென் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



